சனி, 23 செப்டம்பர், 2017

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உங்கள் அனைவரிடம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள், பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று சொல்லியிருப்போம். ஆனால் உண்மையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை அது தான் உண்மை. அவன் பாத்தான், இவன் பாத்தான் என்று தினமும் சொன்னது எல்லாம் பொய். ஏனெனில் எங்களுடைய கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்று பொய்களை சொன்னோம். இது தான் உண்மை.


வடிவேலு காமெடி போல், இது அந்த வாய், இது வேற வாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். அன்றைக்கு இருந்த சூழ்நிலையை நீங்கள் என்னி பார்க்க வேண்டும். நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, அமித்ஷா, வெங்கைய்யா நாயுடு எல்லோரும் வருகிறார்கள், எல்லோரும் வந்து அப்போலோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டி என்று முதலாளி இருக்கிறார் அவர் அறையில் உட்கார்ந்து இருப்பார்கள், நாங்களும் அவர்களை சுத்தி உட்கார்ந்து கொள்ளுவோம், வெளியில் வந்து ஜெயலலிதா நல்லா இருக்கிறார் என்பார்கள்.

 ஜெயலலிதாவை பார்க்க சசிகலா போவார், அவர்களது குடும்பத்தார் போவார்கள். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என்று சொல்லி விடுவார் என்று தான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை: