திங்கள், 15 ஜனவரி, 2018

பெரியார் வழியில் தமிழக வளர்ச்சி இருக்க வேண்டும்!

பெரியார் வழியில் தமிழக வளர்ச்சி இருக்க வேண்டும்!மின்னம்பலம் :‘தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி என்பது பெரியார் வழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்’ என்று சென்னையில் நேற்று (ஜனவரி 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பேசியுள்ளார்.
நேற்று சென்னை அடையாறிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு குஜராத் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பினர் சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பேசிய ஜிக்னேஷ், “தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி என்பது பெரியார் வழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிக்னேஷ் மேவானியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...
குஜராத் நதிநீர் திட்டம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்?

“குஜராத்தில் ஆற்றை புனரமைக்கும் திட்டத்தின்போது 50 ஆயிரம் மக்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். எனவே, அதை தவிர்க்க வலியுறுத்தி மேதா பட்கருடன் இணைந்து ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதேபோன்றுதான் சென்னையிலும் நடைபெறும்.”
அதிமுக அரசை பாஜகவின் பினாமி அரசு என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
“இங்குள்ள அதிமுக அரசு பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. பாஜக, அதிமுகவுக்கு இடையே மேட்ச் பிக்சிங் நடைபெறுகிறது. பாசிச வகுப்புவாத, சாதியவாத, முதலாளித்துவ பாஜக தமிழகத்தில் காலூன்ற தமிழக மக்கள் விடக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன். அது நடைபெற்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதுபோல் ஜனநாயக படுகொலையாகிவிடும்.”
நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது எனக்குப் புரியாத ஒன்று. அது என்னவென்று காண்பதற்கு அவலாக இருக்கிறேன்.”
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா?
“நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை: