செவ்வாய், 16 ஜனவரி, 2018

தினகரன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தனிகட்சி ... அவசரமாம்

Veera Kumar - Oneindia Tamil தினகரன் தனிக்கட்சி தொடங்க என்ன காரணம் ? பரபரப்பு பின்னணி தகவல்கள் சென்னை: தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு எடுக்கப்படும் என்று சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் புதுச்சேரியில் பேட்டியளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆனால், இதுபோன்ற முடிவுக்கு அவர் செல்வார் என்பதை சில நாட்களுக்கு முன்பே உங்கள் 'ஒன்இந்தியாதமிழ்' செய்தியாக வெளியிட்டிருந்தது. தினகரன் முடிவுக்கு காரணம் உள்ளாட்சி தேர்தல்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். உள்ளாட்சி தேர்தல் உள்ளாட்சி தேர்தல் இரட்டை இலையை பெற்ற கையோடு உற்சாகத்தில் உள்ள எடப்பாடி, பன்னீர் செல்வத்தின் அடுத்த இலக்கு உள்ளாட்சி தேர்தல்தான். தங்களுக்கு சாதகமாகத்தான், மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்துள்ளனர். 
இதனால் திமுக தரப்புக்கு சற்று கலக்கம்தான். அரசியல் அடி அரசியல் அடி இந்த நிலையில் தினகரனுக்கு அதிகபட்சம் 8 சதவீதம் வாக்குகள்தான் உள்ளாட்சியில் கிடைக்கும் என எடப்பாடி தரப்பு கணக்கு போட்டுள்ளது. அதோடு, தினகரன் என்ற பிம்பத்தின் மீது திடீரென உருவான மாயை மக்களிடமிருந்து விலகிவிடும் என்று நினைக்கிறது அந்த தரப்பு. 
 
இதற்கு முக்கிய காரணம், தினகரனுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சின்னம் கிடையாது என்பதுதான். சின்னம் தேவை சின்னம் தேவை கட்சி இல்லை என்பதால், வார்டுக்கு ஒரு சின்னம் என போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தினகரன் எவ்வளவுதான் பணத்தை வாரியிறைத்து தேர்தல் செலவு செய்தாலும், மக்களுக்கு சின்னங்களை நினைவில் வைப்பதில் குழப்பம் ஏற்பட்டு அது அவருக்கு பாதகமாக முடியும். அதுவே, கட்சி ஆரம்பித்து ஒரு சின்னத்தை பெற்றுவிட்டால், மக்கள் மத்தியில் அதை பிரபலப்படுத்திவிடலாம். 
 
இரட்டை இலை முயற்சியும் உண்டு இரட்டை இலை முயற்சியும் உண்டு ஆர்.கே.நகரில், தொப்பி பிறகு குக்கர் போன்றவற்றை, எப்படி மக்கள் மனதில் ஆழமாக பதியவைத்தாரோ அதே போல உள்ளாட்சியிலும் மக்கள் மனதில் ஒரே சின்னத்தை பதிய வைத்துவிடுவது எளிது என நினைக்கிறார் தினகரன். 
 
அதேநேரம், அதிமுகதான் அவரது இலக்கு. இந்த கட்சியெல்லாம் தற்காலிகமானதுதான். எனவேதான், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அதே பேட்டியில் கூறியுள்ளார் தினகரன். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, எடப்பாடி அணி தன்னிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே தனிக்கட்சி முடிவை தினகரன் கைவிடுவார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: