ஞாயிறு, 14 ஜனவரி, 2018

தலைவர்களின் பொங்கல் வாழ்த்துக்கள் ... தமிழர் பாரம்பரிய மாதம் கனடாவில் ஆரம்பித்து வாய்த்த ஜஸ்டின் த்ருடோ



பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து!
மின்னம்பலம் :தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் என்று பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர், துணைமுதல்வர்
அகிலமே பயனுறும் வகையில் தன் உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் வழங்கிய நம் தமிழ் இனம் தொன்றுதொட்டு கொண்டாடி மகிழும் இந்தப் பொங்கல் திருநாளை இந்த ஆண்டும் மிகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ அதிமுக சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவர்
பொங்கல் தமிழர்களின் தனித்துவமான விழா. தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதி பழம்பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும். இரு வண்ணக் கொடி பறக்கட்டும். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த், தேமுதிக தலைவர்
உழைப்போரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் உழைப்புக்கு மரியாதை தரும் நாள் பொங்கல் திருநாள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபடுவது நமது பாரம்பர்ய வழக்கமாகக் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது மக்கள் வாழ்வில் நல்லவையாக இருக்கட்டும். இந்தப் பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும் குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்
இருளுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு எத்தனை சோதனைகளும் வேதனைகளும் வந்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு தமிழகத்தின் நலன் மற்றும் ஜனநாயகத்தைக் காக்க இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
டி.டி.வி.தினகரன்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயற்கை அருளாலும் தங்கள் கடின உழைப்பின் பலனாலும் இறைவனை வணங்கி தம்மோடு உழைத்திட்ட கால்நடைகளுக்கும் தனது நன்றியினையையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ளும் ஒரு பொன்னான திருநாள் பொங்கல். விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் ஒரு தோழனாக, அவர்களைக் காக்கும் ஓர் அரசாங்கம் வேண்டும். ஆனால், ஒரு களைச் செடியைப் போல தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் அமைந்துவிட்டது. அதை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம். ஆம், தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும்.
ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்
பொங்கல் திருநாள், அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற இந்த விழா இயற்கையோடு இயைந்த மனித வாழ்வின் வெளிப்பாடாகும். அன்றைய தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தை மாதத்தில் அறுவடை நடைபெறும். அறுவடையின் தொடக்கத்தைப் புதுப்பானை, புத்தரிசி என கொண்டாடினர் நம்முடைய முன்னோர்.
தைத் திருநாள் என்பது உழைப்பை, உழைப்பவரை உற்சாகப்படுத்தும் திருவிழா ஆகும். இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்பதை ஓங்கி உரைக்கும் திருநாளில் இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாக்கவும் தமிழ், தமிழரின் உரிமைகளை காத்து நிற்கவும் விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.
திருமாவளவன், விசிக தலைவர்
தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் விழா மட்டுமே மதம் சார்ந்த அடையாளங்கள் ஏதுமில்லாப் பண்டிகையாகும். உழவுத் தொழிலையும் உழவுக் கருவிகளையும் உழவர் சமூகத்தையும் போற்றுகிறச் சிறப்புடையப் பொங்கல் விழாவில், உழவருக்குத் துணையாயிருக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்பாட்டை கொண்ட இனம்தான் தமிழினமாகும்.
தமிழர் திருநாள் வெறுமெனக் கூடிக் கலையும் கொண்டாட்டத் திருநாளாக இல்லாமல் மண்ணையும் மக்களையும் குறிப்பாக உழவுத் தொழிலையும் காப்பதற்கான சூளுரை ஏற்கும் நாளாக கொண்டாடுவோம்.
முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்
மனித உரிமைகள் பறிப்பு, மத்தியில் அதிகாரக் குவியல், மக்கள் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் மதவெறி பேச்சுக்கள், அறிவியலுக்குப் பொருந்தாத சாதி எனும் தப்பெண்ணம் ஒருபக்கம், மறுபக்கம் ஏழ்மை எனும் நிலைமாறி ஒரு சமதர்ம சமூகம் நோக்கி நடைபோட பொங்கல் திருநாளில் சபதமேற்போம்

கருத்துகள் இல்லை: