புதன், 17 ஜனவரி, 2018

பாஜக & தந்தி டிவி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்று சொல்லிவிட்டார் என்று முதல் முதலில் செய்தி போட்டது யார்...?*
*வைரமுத்து தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் அதிகமாக தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியது யார்...?*
Related image *வைரமுத்துவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் போராடுவதாக கடந்த ஒருவாரமாக செய்தி போடுவது யார்...?*
*நிற்க....!*
*3 மாதத்திற்கு முன் NDTV நிறுவனதலைவர் திரு. பிரணாய் ராய் அவர்கள் தனது டிவிக்கு பேட்டியளித்தார் அதில் பாஜக தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைத்து அதன் பழியை திராவிட கட்சிகள் மீது சுமத்தி (குறிப்பாக திமுக மீது) தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிடுகிறது என்று கூறியிருந்தார்.*
*பாஜக தன் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழக மக்களிடையே வதந்தியை பரப்ப தந்தி டிவி & ரங்கராஜ் பாண்டேவுக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக திரு. பிணாய் ராய் அவர்கள் பேட்டியை முடிந்திருந்தார்...*
http://nidur.info/old/index.php…
*இப்போது புரிகிறதா ஏன் வைரமுத்து பலிகடா ஆக்கப்பட்டார் என்று...
*
*பாஜக & தந்தி டிவி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...*
*#தாணுப்பிள்ளை அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து....*
*

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய்
ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.
அதில்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம், தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் 'தந்தி டிவி' என்றும் அதன் முதன்மை செய்தி் ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார்.
பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றிணைந்த அணியை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களுக்கு ஆதரவான செய்திகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பலம் பெறச் செய்வதுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. இது கூட ஒரு விதத்தில் பாஜக செய்யும் ஊழல் தான். 2014 தேர்தலிலேயே இந்த வகை யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது பாஜக.
குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்திய போது இந்த வகை பிரச்சாரங்களே அவர்களை ஆட்சியில் அமர வைத்தது. ஆனால் இந்த முறை பாஜகவின் திட்டங்கள் சென்ற முறை போன்று முழு பலனையும் அளிக்காது என்று தான் நினைக்கிறேன் என்று தீர்க்கமாக சொல்கிறார்.
//இந்த முறை பாஜகவின் திட்டங்கள் சென்ற முறை போன்று முழு பலனையும் அளிக்காது என்று தான் நினைக்கிறேன்// மிக மிக சரியான வார்த்தை. ரஜினி என்னும் மண் குதிரையை பொன் குதிரை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எதார்த்தம் அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.
ஆன்மீகவாதி கஞ்சனாக இருக்க மாட்டான். கஞ்சனாக இருப்பவன் ஆன்மீகவாதியே அல்ல. மகா கஞ்சனான  ரஜினி இதுவரை   மக்களிடம் போட்டுவந்த ஆன்மீகவாதி வேஷமெல்லாம், விழித்துக்கொண்ட தமிழ் மக்களிடம்  இனி  எடுபடாது.  வாழ்நாள் முழுக்க ஜாலியாக இருந்துவிட்டு 68 வயதில் ஒருவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதெல்லாம் சிறிதும் சாத்தியமல்ல.    இதை சரியாக கணித்துத்தான் இந்தியாவின் சிறந்த ஊடகவியலாரான திரு.பிரணாய் ராய் கூறியுள்ளார் என்று அறிய முடிகிறது

கருத்துகள் இல்லை: