திங்கள், 21 மே, 2018

காங்.-மஜத கூட்டணி அரசில் சிக்கல் உள்ளது: டி.கே.சிவகுமார் பேட்டி

Lakshmi Priya - Oneindia Tamil : பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து அரசமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 
ஒருபக்கம் சிக்கல் இல்லை என குமாரசாமி கூறியிருந்த நிலையில், சிவகுமார் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. செய்திகள் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம் கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்கிறார். அதற்கடுத்த நாள் வியாழக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவி வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜேடிஎஸ்ஸும் கோரி வருகின்றன. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு குமாரசாமி செல்கிறார். அங்கு சோனியா மற்றும் ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைச்சரவை இறுதி செய்யப்படும் என தெரிகிறது. 
  மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு 
 கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமிக்கு அனைத்திந்திய வீரசைவ மகசாபை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், காங்கிரஸின் சிவசங்கரப்பாவை உள்துறை அமைச்சராக்க வேண்டும். வீரசைவ பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் ஒரு மதச்சார்பற்ற அரசு அமைவது குறித்து ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசுகள் அமைய வேண்டியது அவசியம். அதனால்தான் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார், 
 டெல்லியில் சோனியா, ராகுல் ஆகியோரை இன்று சந்திக்கிறார் குமாரசாமி 
 நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ளார் குமாரசாமி 
அமைச்சரவையில் யாருக்கு இடம் என்பது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனைகர்நாடகத்துக்கு இரு துணை முதல்வர்கள்? 
 
தலித் மற்றும் லிங்காயத்து எம்எல்ஏக்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் விருப்பம்
 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் மற்றும் சிவசங்கரப்பாவுக்கு துணை முதல்வர் பதவிகள்? 


கருத்துகள் இல்லை: