ஞாயிறு, 20 மே, 2018

திராவிட பிதா பண்டிதர் அயோத்திதாஸர் பிறந்த நாள்

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 4, 1914) தென்னிந்தியாவின்
முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார்.[2] 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர். பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.
Adv Manoj Liyonzon : பண்டிதர் அயோத்திதாஸ் அவர்களை திராவிட பிதா என்றழைக்க காரணம் அவர் தனது மானுடவியல் ஆராய்ச்சியின் மூலம் நாம் எல்லோரும் திராவிடர்கள் என்கிற பதத்தை நமக்கு அறிமுகம் செய்தபடியால் தான்

ராபர்ட் கால்டுவெல் அவர்களின் மொழியில் ஆராய்ச்சியில் ஃப்ரான்ஸிஸ் வொய்ட் எல்லிஸ் அவர்களின் திராவிட மொழி குடும்ப பகுப்பாய்வு தாக்கம் இருப்பதை நாம் அறிவோம்
இவர்கள் இருவரின் மொழியில் துறை சார்ந்த திராவிட மொழி குடும்ப ஆராய்ச்சி பங்களிப்பு, பண்டிதர் அயோத்திதாஸின் பரந்துபட்ட மானுடவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
ஃப்ரான்ஸிஸ் வொய்ட் எல்லிஸ் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் மொழியில் பங்களிப்பையும் தாண்டி பண்டிதர் அயோத்திதாஸ் அவர்களின் மானுடவியல் ஆராய்ச்சி என்பது திராவிட மொழியில், மதம், சாதி, கலாச்சாரங்கள், சமூகநீதி, பகுத்தறிவு என்று பரந்துபட்ட நோக்கத்தை கொண்டது என்பதாலேயே பண்டிதர் அயோத்திதாஸ் அவர்கள் திராவிட பிதா என்ற பதத்திற்கு உரியவர் என்கிறேன்
ஆக நாம் திராவிடம் 150ஐ நோக்கி சென்று கொண்டிருக்கையில், திராவிடம் 100 என்று சுருங்குவது, பண்டிதர் அயோத்திதாஸ் அவர்கள் அட்டவணை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கொண்டாடப்படுவதில்லை. அவரது திராவிட பங்களிப்பும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பது கசப்பான உண்மை

கருத்துகள் இல்லை: