செவ்வாய், 18 ஜூலை, 2017

எவிடன்ஸ் கதிர் :அருந்ததியர் சமூகத்து மக்களின் வலிகளை புரிந்து கொள்ளுகிறேன்

அண்ணா..உங்களை சில அருந்ததியர் தம்பிகள் விமர்சிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.அப்படியா? அவர்கள் மட்டுமா சில பறையர் தம்பிகளும் விமர்சிக்கிறார்கள்.சில பள்ளர் தம்பிகளும் விமர்சிக்கிறார்கள்.ஏன் பல ஆதிக்க சாதி தம்பிகளும் விமர்சிக்கிறார்கள்.விமர்சனத்தை ஏற்று கொள்ளுவேன்.தவறு செய்து இருந்தால் மன்னிப்பும் கேட்பேன்.ஆனால் இழிவு படுத்தினால் கவலைப்பட மாட்டேன்.பி.ஜெ.பி.காரர்களும் பா.ம.க.காரர்களும் பல சாதி சங்கங்களின் ஆட்களும் என்னை இழிவு படுத்தியது போன்று வேறு யாரையும் இழிவு படுத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை.என்னை கொல்ல வேண்டும் என்று சில சாதி சங்கங்கள் பேசி இருக்கின்றனர்.எவிடென்ஸ் கதிரை கொல்லுங்கள்.அதற்கு நான் பணம் வசூலித்து கொடுக்கிறேன் என்று ஒருவன் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டான்.ஆக..எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன்.நான் பறையராக பிறந்து இருக்கலாம்.ஆனால் அருந்ததியர் சமூகத்து மக்களின் வலிகளை புரிந்து கொள்ளுகிறேன்.இதுதான் உண்மை.ஆனால் பெரும்பான்மையாக இந்த மூன்று சமூகங்கள் மட்டும் அல்ல தேவர்கள்,வன்னியர்கள்,நாடார்கள்,பிராமணர்கள் என்று பலரும் என்னை அரவணைத்து கொள்ளுகின்றனர்.என்னை அரவணைத்து கொள்ளுவார்கள் எல்லாம் ஒரே புள்ளியில் ஒன்று இணைகிறோம்.அதாவது தனிமனித வெறுப்பினை காட்டிலும் சாதி கட்டமைப்பு உடைபட வேண்டும் என்பதுதான் அது.ஆக காழ்ப்புணர்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.காழ்ப்புணர்வினையே வேலையாக வைத்து இருப்பவனை நான் மதிப்பதும் இல்லை.வேலை மட்டும்தான் இங்கு நிற்கும்.பொறாமை எல்லாம் செல்லூர் ராஜ் தர்மாகோல் போன்று அடித்து பறந்து செல்லும்.

கருத்துகள் இல்லை: