சனி, 19 ஆகஸ்ட், 2017

‘வேதா நிலையம்’ நினைவு இல்லப்பணி தீவிரம்.. எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

சென்னை, ஆக.18:முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ அரசுடமையாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து, அந்த வீடு காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தினகரனால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு படையினர் வெளியேற்றப்பட்டனர். வீட்டில் இருந்த மற்றவர்களும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வீட்டிற்குள் செல்பவர்கள் காவல் துறையின் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கான பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா வீட்டிற்குள் செல்ல முயன்றதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இல்லாத வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு எதற்காக போடப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து இருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்படுகிறது என்று நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டது. போயஸ் கார்டன் பாதுகாப்பு பணியில் இருந்த தினகரனின் ஆட்கள் வெளியேற்றப்பட்டனர். வீட்டிற்குள் இருந்த மற்றவர்களும் வெளியேற்றப்பட்டு தற்போது காவல் துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் இணை கமிஷனர் அன்பு தலைமையில் துணை ஆணையர்  தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 30 போலீசார் வீதம் 3 ஷிப்டுகளில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீட்டிற்குள்ளே யாரும் செல்ல அனுமதி இல்லை. உள்ளே செல் பவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் ஜெயலலிதா வீட்டின் முன்பு தற்போது போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ‘வேதா நிலையம்’, ‘போயஸ் தோட்டத்தில் உள்ள அம்மாவின் இல்லம்’, ‘பொது மக்களுக்கான நினைவு இல்லம்’ என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது  மாலைச்சுடர்

கருத்துகள் இல்லை: