சனி, 23 செப்டம்பர், 2017

மீண்டும் ஒரு சுதந்திர பத்திரிகையாளர் கொலை! கே.ஜே.சிங் (65) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர்..


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் (65) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர். தி ட்ரிபியூன் உட்பட பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். கே.ஜே.சிங் அவரது தாயார் குர்சரண் கவுருடன் (92) மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்துவருகிறார்.
இன்று (செப்டம்பர் 23), தனது தாயாருடன், உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தொலைக்காட்சி உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்தக் கொலை நேற்று மாலைக்கு மேல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், திரிபுரா ’தீன் ராத்’ தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக் படுகொலையைத் தொடர்ந்து கடந்த 18 நாட்களில் மூன்றாவது பத்திரிகையாளராக கே.ஜே.சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கௌரி லங்கேஷ்:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), செப்டம்பர், 5 ஆம் தேதி இரவு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். வகுப்புவாதத்துக்கு எதிராகவும் மதவாதத்துக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து போராடி வந்தார். லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிக்கை மூலம் இவர் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதினார். இதனால், அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது  minnambalam

கருத்துகள் இல்லை: