வியாழன், 21 செப்டம்பர், 2017

உத்தர பிரதேசம் ... ஒரு பைசா விவசாய கடன் தள்ளுபடி .. பிராடுகளின் ஆட்சியில் கூத்துக்கள் அரங்கேற்றம்

tamilthehindu :சங்கிகள் அடிமுதல் நுனிவரை அத்தனையிலும் ப்ராடுதனத்தில் ஊறியவர்கள் என்பதற்கான மற்றொரு சான்று:- கடந்த ஏப்ரலில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.36,000 கோடி பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கில் இழப்பு கண்ட ஒரு விவசாயிக்கு ஒரே ஒரு பைசா மட்டும் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அதாவது மாநிலத்தின் 86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை இதன் மூலம் தள்ளுபடி கிடைக்கும். இந்நிலையில் மதுராவில் உள்ள ஆதிங் கிராமத்தைச் சேர்ந்த சிட்டி சர்மா என்ற விவசாயிக்கு பயிர்க்கடன் தள்ளுபடியாக 1 பைசா தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிறைய பேருக்கு மிகமிகக் குறைவான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனக்குக் கிடைத்தது ‘கொடூரமான ஜோக்’ என்று கோபாவேசமாகக் கூறினார் சிட்டி சர்மா. ஆனால் இவரது பயிர் இழப்பு லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகும்.

‘விவசாயிகளுக்கு கிடைத்த பெரும்பேறு’
யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றவுடன் உ.பி.யில் ரூ.36.000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளிவந்தது. கடனில் மூழ்கியுள்ள விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ‘பெரும் பேறு’ என்று அப்போது பேசப்பட்டது.
இந்நிலையில் சிட்டி சர்மாவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியில் 1 பைசா கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.
சிட்டி சர்மா என்ற துரதிர்ஷ்ட, 52 வயது விவசாயியை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக அவரது ஒரு அறை கொண்ட அவர் வீட்டில் பார்த்த போது, சிட்டி சர்மா மிகவும் கோபமாகக் காணப்பட்டார்.
“யோகி கடன் தள்ளுபடி அறிவித்தவுடன் நான் இனிப்புகள் வழங்கி கொண்டாடினேன். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நான் ரூ.1.55 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இது 6 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் கடும் இழப்புகளால் கடனைத் திருப்பி அளிக்க முடியவில்லை. இன்று எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நிறைய தலைவர்கள் விவசாயிகள் உணர்ச்சிகளுடன் விளையாடினர். ஆனால் இந்த யோகி ஆதித்யநாத் இவர்களில் மிகக் கொடூரமானவர்.” என்றார் சிட்டி சர்மா. இவர் ‘மார்ஜினல் விவசாயி’ என்ற வகையின் கீழ் வருகிறார்.
“யோகிஜி ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி திட்டம் அறிவித்த நாள் முதல் நான் இதைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது என்ன கூறுவது என்று தெரியவில்லை. 6 மாத கால காத்திருப்பு வெறும் 1 பைசாவுக்காகத்தானா என்ற கேள்வி எழுகிறது.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்களுடன் கூடிய கடன் தள்ளுபடி சான்றிதழைக் காட்டினார் சிட்டி சர்மா, அதில், ‘ஒவ்வொரு அடியிலும் விவசாயிகள் நலனுடன் இருக்கிறோம்’ என்ற வாசகமும் உள்ளது.
நான் அதிகம் பேச விரும்பவில்லை. ரூ.36,000 கோடி என்று விளம்பரப்படுத்தியதன் அர்த்தம் என்ன? என்னைப் போன்றே இதே அளவுக்கு கடன் வாங்கிய பிற விவசாயிகள் முழு கடன் தள்ளுபடி பெற்றது எப்படி? என்று குமுறினார் சிட்டி சர்மா.
ஒரு பைசா கடன் தள்ளுபடியை அடுத்து சிட்டி சர்மா வீட்டின் முன் பத்திரிகையாளர்களும், புகைப்படக் காரர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
ஊடக கவனமும் சிட்டி சர்மா குடும்பத்துக்கு கூடுதல் செலவுகளையே ஏற்படுத்தியுள்ளது, வருவோருக்கு தேநீர் வழங்கும் செலவே ரூ.100 வரை ஆகிறது.
இவர் மட்டுமல்ல 40 பைசா கடன் தள்ளுபடி பெற்ற பிற விவசாயிகளும் உள்ளனர். ஆனால் 1 பைசா தள்ளுபடி பெற்றதாக சான்றிதழ் இவரைத் தவிர ஒருவரிடமும் இல்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி கூறுவதென்ன?
இந்த விவகாரம் குறித்து பிஎன்பி வங்கியின் மாவட்ட மேலாளர் பி.கே.சிங் கூறும்போது, ''ஒரே வங்கியில் இரு கணக்குகள் வைத்திருந்தால் இந்தக் குழப்பம் வரலாம்'' என்றார். ஆனால் சிட்டி சர்மாவுக்கு அப்படி 2 கணக்குகள் இல்லை. இரு கணக்குகள் இருந்தால், ஒரு கணக்கில் கடன் திருப்பி அளிக்கப்பட்டு மீதி தொகை சிறைய தொகையாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார் அவர்.
எப்படியோ, இந்த விவகாரம் தற்போது அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, மதுரா மாவட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இது பஞ்சாப் நேஷனல் வங்கியின் தவறு, என்றும் அவருக்கு புதிய சான்றிதழ் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மதுரா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அர்விந்த் மலப்பா, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறியபோது, “சிட்டி சர்மா விவகாரம் தொழில்நுட்பக் கோளாறுகளால் நடந்திருக்கலாம். இதனைப் பார்த்து வருகிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: