வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பெரியாரை பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

'அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்'
Karthikeyan Fastura :இதற்கு இதுவரை கொடுத்துவந்த அர்த்தம் என்னோவோ "கற்றறிந்த பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புகொண்டிருப்பது அரிய செல்வங்களை விடப் அரிய செல்வமாகும்"
 நான் கொள்ளும் அர்த்தம் என்னவென்றால்
"தந்தை பெரியாரை விட அறிந்து கொள்ள வேண்டிய அரிய செல்வம் எதுவும் இல்லை ". இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு ஒரு மாமனிதர் பிறப்பார். அவர் அதுவரை மனிதர்கள் செய்த அத்துணை கொடுமைகளையும் தட்டிகேட்பார். சாதி வெறி, மத வெறி, இன வெறி, மொழி வெறி என்று மனித மனங்களை பிடித்திருக்கும் பீடைகளை அடித்து நொறுக்குவார். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைதனத்தை உடைப்பார். சுயமரியாதையை மீட்டெடுப்பார் என்று வள்ளுவர் நினைத்தாரோ என்னவோ ஒரு குறள் மட்டும் எழுதவில்லை ஒரு அதிகாரமே எழுதினார். அதன் பெயர் "பெரியாரை துணைக்கோடல்". பெரியாரின் கைத்தடியை பிடித்துக்கொள் உன்னை பிடித்திருந்த பீடையெல்லாம் தலைதெறிக்க ஓடும் என்று நினைத்து இப்படி ஒரு அதிகாரத்தை வள்ளுவர் எழுதியிருக்க கூடும். இன்றைய மத, சாதிய,சந்தர்ப்பவாத சக்திகளின் ஆட்டத்தில் இருக்கும் நாட்டிற்கு பெரியாரின் தேவை மிக அதிகம். ஆகவே நாம் இப்படிதான் பொருள் கொள்ளல் வேண்டும். நன்றி கார்த்திக். Karthikeyan Fastura

கருத்துகள் இல்லை: