புதன், 20 செப்டம்பர், 2017

NEET தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கல்லூரிகளில் வெளிநாட்டு NRI வந்து ப்ரீ சீட்டில் படிக்க வசதி

linesmedia.in :
நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல http://bit.ly/2fyJTbq ….


யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??
1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??
1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 ,
பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ??
2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …. இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ??
3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106
இது எப்படி சாத்தியம் ஆச்சு ??
4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??
5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு குடிமக்கள்
எழுதியவர்கள் 58
சீட் வாங்கியவர்கள் 47

இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ???

ஏன் என்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட் தான் சிபிஎஸ்இ ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம் .. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்து நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது http://bit.ly/2fyJTbq …
அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது இன்டர்நேஷனல் தேர்வை என்ன டேஷ்க்கு தமிழ்நாட்டில் ஏதோ மூலையில் வாழும் மிடில்கிளாஸ் , ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எழுத வேண்டும் ???

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து ப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் , இந்த தேர்வில் தான் தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 பேர்தான் ….
புரிந்துகொள்வோம் !!
http://bit.ly/2fyJTbq
-ரத்திஷ் குமரன்

கருத்துகள் இல்லை: