சனி, 14 அக்டோபர், 2017

நடிகர் விஷால் கட்டளையிடுவதா? அபிராமி ராமநாதன் சாடல்!

நக்கீரன் :திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் கட்டளையிடுவது போல் விஷால் பேசுவதா? என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் விஷாலை சாடியுள்ளார். இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சின்னபடங்களுக்கும், பெரிய படங்களுக்கும் ஏற்ப டிக்கட் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது அதற்காக அரசிற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஏதோ கமிட்டி அமைத்து எங்களை ஆய்வு செய்யப்போவதாக விஷால் தெரிவித்துள்ளார். இதில் எங்களுக்கு என்ன மனவருத்தம் என்றால், அவர்களுக்கு என ஒரு சங்கம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. இருவரும் இணைந்து பேசி எதையும் முடிவு செய்யலாம். அதை விட்டுவிட்டு கட்டளையிடுவது போல் உத்தரவு போட்டால் இது என்ன நியாயம்? திரையரங்க உரிமையாளர் சங்கம் என ஒன்று இருப்பதை விஷால் மறந்துவிட்டாரா?


தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மீது பல குற்றம் இருந்தாலும் அதை சொல்ல தயாராக இல்லை. அப்படி இருப்பினும் அவர்களுடன் தான் நேரடியாக தெரிவிப்போமே தவிற இப்படி பத்திரிக்கைகளை கூட்டி அவர்களிடம் தெரிவிக்க விரும்பவில்லை.

கண்டிப்பாக அம்மா குடிநீர் விற்பனை செய்ய கொடுத்தால் நாங்கள் திரையரங்கில் விற்பனை செய்ய தயார். 16 வருடமாக எங்களுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. அதனால் வேறு வழிகளில் சம்பாதிக்க வேண்டியதாகிவட்டது. தற்போது தான் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் வேறு எங்கும் சம்பாதிக்க தேவையில்லை.

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத அளவிற்கு விலை கேன்டீன்களில் உணவு பொருட்கள் நிர்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் திரையரங்குகளில் உணவுகளை கொண்டுவருவதில் பல சிக்கல்கள் உள்ளன. அப்படி அனுமதிக்கப்பட்டால் எங்களால் திரையரங்கை பராமரிக்க முடியாது. இந்த புதிய வரிவிதிப்பால் திரையரங்கிற்கு மக்கள் வருகை குறையும் என்பதில்லை, திரைப்படம் நன்றாக இருந்தால் எந்த விலையும் தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: