சனி, 11 நவம்பர், 2017

ரெயிடுக்கு 200 கார்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொடுத்தார்... தெரியாமல் கொடுத்தாராம் ,,,, நம்புறோம் சாமி!

வெப்துனியா :நேற்று சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களின் 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது தெரிந்ததே. இந்த ரெய்டுக்கு கார்களை அனுப்பிய நிறுவனம் ஃபாஸ்ட் டிராக் நிறுவனம். ஆனால் இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்றும், ஓபிஎஸ் கட்டளையிட்டதன் பேரிலேயே கார்கள் அனுப்பப்பட்டதாகவும் தினகரன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஃபாஸ்ட் டிராக் உரிமையளர் ரெட்சன் அம்பிகாபதி கூறியதாவது: நவம்பர் 9ஆம் தேதி 200 கார்கள் ஒரு திருமணத்திற்கு தேவை என்று முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கார்கள் ரெய்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது எனக்கே டிவி பார்த்து தான் தெரியும்.. 200 கார்களை கொடுக்கும் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பதில்லை. கார் திருட்டு , உதிரிப்பாகங்கள் திருட்டு போன்ற வற்றை தவிர்ப்பதற்காக மிகவும் தீர்க்கமாக விசாரித்துதான் இவ்வளவு அதிகமான  கார்களை கொடுக்கும் என்று  இத்தொழிலில்  உள்ள ஏனையோர் தெரிவிக்கின்றனர். 

நான் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது உண்மைதான். ஆனால் இந்த ரெய்டுக்கும் ஓபிஎஸ்க்கும் என்ன சம்பந்தம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாளை தினகரன் தரப்பினர்கள் 200 கார்கள் கேட்டாலும் அனுப்புவேன். இது என்னுடைய பிசினஸ், இதற்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: