சனி, 11 நவம்பர், 2017

BBC பிலிப்பைன்ஸ் அதிபர் : ஒருவரை கத்தியால் குத்தி கொன்றேன்" - Philippines' President Duterte: I killed when I was 16. ... (CNN)T

தான் இளைஞராக இருந்தபோது ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார். "எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்," என்று வியட்நாமின் நகரமான டா நாங்கில் நடைபெற்ற ஒரு பிராந்திய மாநாட்டின்போது அவர் தெரிவித்தார். டுடெர்டே "வேடிக்கையாகவே" அவ்வாறு பேசியதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக, டாவோ மேயராக இருந்தபோது சந்தேகத்திற்குறிய குற்றவாளிகளை தானே கொன்றதாக டுடேர்டே தெரிவித்திருந்தார். ' பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, மற்ற பிராந்திய தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். டுடெர்டே பிலிப்பைன்ஸில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்களை நீதிக்கு புறம்பாக கொல்லப்பட்டதை ஊக்குவித்தார்.


மேலும், அந்நாட்டில் போதைக்கு அடிமையான மூன்று மில்லியன் மக்களை "படுகொலை செய்தால் மகிழ்ச்சியடைவேன்" என்றார். டா நாங்கில் பிலிப்பைன்ஸ் மக்களுக்காக உரையாற்றிய டுடெர்டே, தனது இளமைக்காலத்தின்போது ஒருவரை கொன்றதாகவும், மேலும் அப்போது பல சண்டைகளில் ஈடுபட்டு "சிறைக்கு பலமுறை சென்று வந்ததாகவும்" தெரிவித்தார்.

கடலுக்குள் ஒரு கல்லறை! (காணொளி) இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய, அதிபர் டுடெர்டேவின் செய்தித்தொடர்பாளரான ஹாரி ரோக், அவர் கூறிய கருத்துக்கள் "வேடிக்கையாக" கூறப்பட்டதென்றும், மேலும் வெளிநாடுகளில் பிலிப்பைன் மக்களுக்கு அதிபர் உரையாற்றும்போது அடிக்கடி "நகைச்சுவையாக" பேசுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு எஸ்குயர் என்னும் இதழின் பிலிப்பைன்ஸ் பதிப்புக்கு அளித்த பேட்டியொன்றில், தனக்கு 17 வயதிற்கும்போது, கடற்கரையில் நடந்த ஒரு கொந்தளிப்பான சண்டையின்போது" தான் "ஒருவரை கத்தியால் குத்தி கொன்றிருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதே நிகழ்வைத்தான் டுடெர்டே தனது உரையின்போது தெரிவித்தாரா என்பதில் தெளிவில்லை.

டுடெர்டே, தான் ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டர்களில் இருந்து தூக்கி எறிந்துவிட்டதாகவும், அளிக்கப்படும் நிதி உதவியை அதிகாரிகள் அபகரித்திருந்தால் அதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் ஏற்கனவே கூறியுள்ளார். டுடெர்டேவின் செய்தித்தொடர்பாளர் அவர் "நகைச்சுவையாகவே" அவ்வாறு தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: