புதன், 8 நவம்பர், 2017

கார்டூனிஸ்ட் பாலா அதிகாரமற்றவர்கள் மீது வாள்வீசிய போலி கார்டூனிஸ்ட்

Muruganantham Ramasamy : பாலாவின் கேலிச்சித்திரங்கள் அவரது அரசியல்நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை சித்தரித்த வகையில் சில்லறைத்தனமானவை... அவரது அரசியல்நிலைப்பாடு வெளிப்பட்டபின் அதில் நாம் எதிர்பார்க்க ஏதுமில்லை.. அவர் ஜெயாவிற்கு அடித்த சொம்பிற்காக நமது எம்.ஜி.ஆரிலேயே வேலை கொடுத்திருக்க வேண்டும்..
பல தமிழ்தேசிய போர்வாள்களைப்போலவே ஜெயாவின் எதேச்சிகாரத்தை பணிந்து வணங்கி அதிகாரத்தில் இல்லாதவர்களை நோக்கி வாள்வீசிய பட்டியலில் பாலாவுக்கும் இடமுண்டு.. எடப்பாடி போன்ற ஒரு அரசியல் திறமற்ற ஒருவரின் கீழ் தங்களின் போராளி பிம்பத்தை புதுப்பித்துக்கொள்ள விளைபவர்களுக்கு எடப்பாடி எதேச்சிகாரத்தில் ஜெயாவின் வாரிசுதான் என்பதை துலக்கமாக சொல்லியிருக்கிறது பாலாவின் கைது.. அது மேற்கொள்ளப்பட்டவிதமும் கூட..
ஜெயா உருவாக்கிய அரசியல்மாதிரி என்பது தனது நலன்களுக்காக அதிகார சமரசம், தனக்கு எதிரானவர்கள் எளிமையானவர்கள் என்றால் அடக்குமுறை என்கிற முற்றிலும் சுயநலன் வழியும் அணுகுமுறை.. இதில் இம்மி பிசகாது பயணிக்கிறது எடப்பாடி அரசு.. ஒரே வேறுபாடு ஜெயாவால் தனது எதேச்சிகாரத்திற்கு வெகுசன அங்கீகாரத்தை பெற முடியும். இவர்களால் முடியாது என்பது மட்டுமே..

நவீனகால ஊடக சாத்தியங்கள் பற்றிய புரிதலற்ற அதிகார முட்டாள்தனங்கள்தான் கருத்துசுதந்திர நசுக்குதலின் மையப்புள்ளி.. கருத்துகள் கொப்பளிக்கும் காலத்தில் குப்பையான கருத்துகள் பொதுவெளியில் குவிவதை யாரும் அணைபோட்டுவிட முடியாது.. அது வோறொரு வடிவில் தளத்தில் வீரியமாக வெளிப்படவே செய்யும்..
மேலும் பாலா கைது செய்யப்பட்ட விதமும் சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்கு உகந்ததல்ல.. எப்படிமோசமாயினும் ஒரு படைப்பாளி தனியன்.. அவன் மீது ஒரு அரசின் அதிகாரம் வரைமுறையற்று பாய்வதை எதிர்த்தேயாக வேண்டும்.
மேலும் பேராளுமைகள் சில்லறைத்தனங்களால் சிறுமைப்படுவதில்லை.. அவர்கள் அதை ஒரு சருகைப்போல பாவித்து கடந்துவிடுவார்கள்.. ஆனால் சக சில்லறை அப்படி கருதாதல்லவா..?
எடப்பாடி அதிகாரத்திலிருக்கும் சில்லறை என்பது கூடுதலான அபாயம்..
பாலாவின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்..

கருத்துகள் இல்லை: