சனி, 11 நவம்பர், 2017

மோடியின் மலையாள ஜிமிக்கி கம்மல் பாட்டு விடியோ


பணமதிப்பழிப்பின் முதலாமாண்டு துயரத்தை பகடி செய்து ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது…. பாருங்கள்…
மோடி அரசு மாட்டுக்கறிக்கு தடை விதித்த போது அதை எதிர்த்து ட்விட்டரில் கேரள மக்கள் இது எங்கள் கேரளா “போ மகனே மோடி” (#PooMoneModi) என்ற வார்த்தையை வைரலாக்கி பாஜக-வை அலறவைத்தனர்.
பார்ப்பனியத்தற்கு எதிரான திராவிட நாடு ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் வைரலாக்கினர். அந்த வரிசையில் மோடி அறிவித்த பணமதிப்பழிப்பின்  துயரத்தை பகடி செய்து, ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளத் திரைப்படப் பாட்டு யூடியூபில் வைராலாகி பலரும் அதற்கு நடனமாடி வீடியோ வெளியிடுகின்றனர்.

மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி மக்களின் கையில் இருந்த பணத்தை மொத்தமாக பிடுங்கி, இங்கு தொழிலில்லாமல் மக்களை அலையவிட்டதையும் அப்போது மோடி ‘நாடுமாறி’ நாடு சுற்றிக் கொண்டிருந்ததையும் கேலி செய்கிறது இப்பாடல். மற்றும் கேரள கருப்புப் பணப் பேர்வழிகளுடன் எப்படி சமாதனம் ஆனார்கள் என்பதோடு“குருவியின் தலையில் பனங்காயைப் போல்” மக்கள் முதுகில் மேலும் ஜி.எஸ்.டி வரியை சுமத்தி பாடாய் படுத்துவதையும் அம்பலப்படுத்துகிறது இப்பாடல்.

கேரளாவில் வெங்காரா சட்டசபை இடைத் தேர்தலை ஒட்டி இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இத்தொகுதியில் வாக்குப் பதிவு முடிந்து நவ 15-ல் முடிவு வெளியாக இருக்கின்றனது.
Lyrics : Abdulkhadar Kakkanad sung by : C.H. Fahadh & Liji Francis


கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017 ,மாலை 4.00 மணி, ஒய்.எம்.சி.அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துகள் இல்லை: