வியாழன், 9 நவம்பர், 2017

நமது எம்ஜியார், ஜெயாடிவி அலுவலகம், தினகரன்,திவாகரன், இளவரசி, புகழேந்தி வீடுகளிலும் ஆளுவலகங்களிலும் வருமானவரி சோதனை



விகடன் :கார்த்திக்.சி :  சென்னை
ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து தற்போது, கட்சி டி.டி.வி.தினகரன் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக உள்ளது. கட்சி மற்றும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகியவை டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்தநிலையில், இன்று காலை ஆறு மணி முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்தை முறையாக காண்பிக்கவில்லை மற்றும் வருமான வரி சரியாக கட்டவில்லை என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, ஜெயா டிவிக்கு தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான கடைசி கட்ட விசாரணை நடைபெற்றது. அதேபோல, டி.டி.வி.தினகரன் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்திருந்தார். இத்தகைய சூழலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: