புதன், 6 டிசம்பர், 2017

உத்தராகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

மாலைமலர் :புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் இன்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

கருத்துகள் இல்லை: