புதன், 6 டிசம்பர், 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்ற நதியை தேடி வந்த கடல் போல கதைகள் / செய்திகள்?

இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தற்போது பூதாகரமாக கிளம்பம்  கதைகள் அல்லது உண்மைகள் பற்றி உறுதியாக தெரிவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை.ஊடகங்களில் தற்போது உலாவரும் கதைகள் இவைதான் :
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை பெயர் ஜெயராமன் தாய் பெயர் சந்தியா. தந்தை ஜெயராமனுக்கு தாய் சந்தியா இரண்டாவது தாரமாகும். தாய் சந்தியாவுக்கும் தந்தை ஜெயராமனுக்கும் ஜெயலலிதா ஜெயராம் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன.
தாய் சந்தியா கணவன் ஜெயராமனுக்கு விஷம் வைத்து கொன்றார் என்று ஜெயராமனின் சகோதரி மகள் லலிதா கூறுகிறார்,
அதன் பின் சந்தியாவுக்கு வேறு ஒருவருக்கும் பிறந்த பெண்குழந்தைதான் சைலஜா என்பவர், அந்த சைலஜா தாமோதரன் என்பவரை திருமணம் செய்துள்ளார், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை . ஜெயலலிதாவும் ஷோபன் பாபுவும் கணவன் மனைவியாக ஏழு ஆண்டுகள் வாழ்ந்தனர்.
அவர்களுக்கு பிறந்த பெண்ணின் பெயர் அமுருதா.இந்த குழந்தையை தங்கை சைலஜாவிடம் வளர்க்க கொடுத்தனர்.இவை எல்லாம் இதுவரை உலா வரும் கதைகள் . இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் கற்பனை என்பதை காலம்தான் கூறவேண்டும்

கருத்துகள் இல்லை: