சனி, 9 டிசம்பர், 2017

ராகுல் : குஜராத் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்?

தினத்தந்தி : குஜராத் மாநிலத்தில் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்?: பிரதமருக்கு ராகுல் கேள்வி புதுடெல்லி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமான குஜராத்தின் வளர்ச்சியின்மை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தினம் ஒரு கேள்வி வீதம் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதுவரை பத்து கேள்விகளை முன்வைத்துள்ள ராகுல் இன்று பதினொன்றாம் கேள்வியை பதிவிட்டுள்ளார். குஜராத்தில் பொறியியல் படித்த 80 சதவீதம் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். விற்பனை செய்ய வழியில்லாமல் போனதால் டாட்டா நானோ கார் தொழிற்சாலை திட்டமும் சொதப்பலாக போனது. தேர்வுகளை வியாபாரமாகவும், பள்ளிகள், கல்லூரிகளை கடைகளாகவும் ஏலம் விட்டு விட்டீர்கள். குஜராத்தின் கல்வி கூடங்களை விற்றது ஏன்? என்று ராகுல் வினவியுள்ளார்.

கருத்துகள் இல்லை: