வியாழன், 11 ஜனவரி, 2018

அதிமுகவில் இருந்து பேராசிரயர் தீரன் நீக்கம் ... தவிர்க்க முடியாத உள்கட்சி மோதல்கள்

tamilthehindu :தினகரனிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என தொலைக்காட்சியில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பேரா.தீரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சமீபத்தில் 13  புதிய செய்தித் தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். ஆரம்பத்தில் பாமகவிலிருந்த தீரன் பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதுமுதல் அதிமுகவிலேயே இருக்கிறார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அதிமுகவில் செய்தி தொடர்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் பேராசிரியர் தீரனும் ஒருவர். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பேராசிரியர் தீரன் அதிமுகவில் தற்போதுள்ள பிரச்சனை தீர கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடியும் வைத்துக்கொண்டால் பிரச்சினை தீரும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அதிமுகவின் அடிப்படை கட்சி உறுப்பினர் பொருப்பிலிருந்து தீரன் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து பேராசிரியர் தீரன் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் பேராசிரியர் தீரன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: