வியாழன், 15 பிப்ரவரி, 2018

கனிமொழி தூத்துக்குடி ,திருச்சி ,கடலூர்,விழுப்புரம் தொகுதிகளை குறிவைக்கிறார் ?

Raj - Oneindia Tami  :  லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி திட்டம் ? சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.
அதற்கு முன்னதாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களை தீவிரமாக கனிமொழி வகுத்து வருகிறாராம்.
நாடார்கள், ரெட்டியார்கள், முத்தரையர்கள், வன்னியர்கள் சமூகத்தினர் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
கனிமொழி குறிவைக்கும் தொகுதிகள் இதனை கனிமொழியின் பிறந்த நாளன்று விதவிதமான போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தியிருந்தனர் இந்த சமூகத்தினர்.
இவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தூத்துக்குடி, திருச்சி, கடலூர், விழுப்புரம் தொகுதிகளில் கனிமொழியை போட்டியிடவும் வலியுறுத்தி வருகின்றனர், கட்சியில் முக்கிய பதவி கட்சியில் முக்கிய பதவி இதனடிப்படையில் இந்த 4 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் தமது ஆதரவாளர்களை ஒருங்கிணத்து வருகிறாராம் கனிமொழி.
திமுகவில் கட்சி ரீதியாக துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பொறுப்பு கேட்டுக் கொண்டே இந்த பக்கம் தேர்தலுக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறாராம்
 இதற்காகவே இந்த 4 தொகுதிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு கனிமொழி கூடுதல் முக்கியத்துவம் தருகிறாராம். 
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக பிரமுகர் ஒருவர், அண்மையில் சென்னையில் கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் போலீசார் முன்னிலையில் தீக்குளித்து இறந்தார். இவரது குடும்பத்துக்கு அரசு தரப்பில் நிதி உதவி தரப்படவில்லை. கருணாநிதி ஒப்புதல் தந்துவிட்டாராம் கருணாநிதி ஒப்புதல் தந்துவிட்டாராம் 
இந்த விவகாரத்தை கையிலெடுத்த கனிமொழி, டெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறார். அத்துடன் மணிகண்டன் வீட்டுக்கும் நேரில் செல்ல திட்டமிட்டுள்ளாராம் கனிமொழி. இது எல்லாமே தூத்துக்குடி தொகுதி வாக்குகளை கவனத்தில் வைத்துதான் கனிமொழி செய்து வருகிறார் என்றார். 
அத்துடன் கனிமொழிக்கு இந்த வியூகத்தை ஓராண்டுக்கு முன்னரே தந்தை கருணாநிதிதான் சொல்லிக் கொடுத்ததாகவும் அதனால் தெளிவாக திட்டமிட்டு அடுத்தடுத்து நகர்வுகளை கனிமொழி மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர் திமுகவினர்.

கருத்துகள் இல்லை: