வியாழன், 15 பிப்ரவரி, 2018

ரஜினி கட்சி நியுமராலோஜி ஆய்வு .... படை என்று இருக்கவேண்டுமாம் ... பிரஜை படை மக்கள் படை சொறிப்படை ....


யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை!மின்னம்பலம்: ரஜினி அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தங்களில் ஆறு மாதங்களுக்கு முன் ஈடுபட்டிருக்கும்போதே, ‘ரஜினி தன் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என விரும்புகிறார்’ என்று மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில் முதன்முதலாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்தியின் உறுதித் தன்மை தற்போது நடந்துவரும் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் எதிரொலிக்கிறது.
தற்போது தமிழகம் முழுமைக்கும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட ரீதியாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நிலை நிர்வாகிகள் அதாவது நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மன்ற அகில இந்திய நிர்வாகிகள் தலைமையில் நடந்து வருகிறது.

நேற்று (பிப்ரவரி 14) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவது தொடர்பான ஆலோசனை மற்றும் நேர்காணல் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகி ராஜீவ் மகாலிங்கம், “தலைவர் எப்போதும் அரசியல் பற்றியும் மக்களைப் பற்றியும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எனவே, நாம் ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து தலைவரின் படையில் காவலர்களாக மாற வேண்டும். மற்ற கட்சிகளைப் போல நாம் அல்ல... நமக்கு மக்கள் பலம், தலைவர் பலம் என இரட்டை பலம் இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இதுவரை சேர்த்தது போல இன்னும் இரு மடங்கு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் தலைவரின் படை வலிமையாகும்.
நாம் மாவட்ட நிர்வாகிகளை யானைப் படை என்றும், ஒன்றிய - நகர நிர்வாகிகளை குதிரைப் படை என்றும், கிளைக் கழக நிர்வாகிகளைக் காலாட் படை என்றும் அழைப்போம். இந்த எல்லாப் படைகளும் சேர்ந்து மக்கள் படையைத் தலைவரின் பின்னால் திரட்டிட வேண்டும்” என்று பேசினார்.
ரஜினி தன் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துதான், ‘போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்’ என்று பேசியிருந்தார். இப்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்ற உவமைகளைச் சொல்கிறார் என்றால் அநேகமாக ரஜினி கட்சியின் பெயர் ரஜினி மக்கள் படை என்றுகூட இருக்கலாம் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்.

கருத்துகள் இல்லை: