ஞாயிறு, 11 மார்ச், 2018

BBC :பாஜக உறவு முறிவு: சந்திரபாபு நாயுடுவின் தந்திரக் கணக்கு என்ன?

பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி முறிவுஸ்ரீராம் கோபிசெட்டி ">பிபிசி தெலுங்கு< தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக இந்தியாவின் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு தலைநகர் டெல்லியின் அரசியல் வட்டாரங்களிலும், ஆந்திர பிரதேச மக்களும் எதிர்பார்க்காத முடிவல்ல. இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு கட்சிகளுக்கும் பெரிய அளவிலான இழப்பு இல்லாத இந்தப் பிரிவினையை எதிர்கொள்ள தெலுங்கு தேசமும், பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) நன்றாகவே தயாராகியிருந்தன.
பாஜகவோடு கூட்டணியில் தொடர்வதால் உருவாகும் கெட்டப்பெயரில் இருந்து தப்பித்து கொள்வதைத் தவிர இந்த முடிவின் மூலம் என்ன நன்மையை சந்திரபாபு நாயுடு பெறுவார் என்பது கேள்விகுறி.

மாநில தேர்தல் முன்னதாகவே நடக்குமா நடக்காதா? பாஜகவும் யுவஜன ஸ்ராமிகா ரயத்து காங்கிரஸ் கட்சியும் (ஒய்எஸ்ஆர்சிபி) கூட்டணி வைத்துகொள்ள வாய்ப்பு உள்ளதா? அவ்வாறு இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேருமானால் வெளிப்டையாக அதை அறிவிக்குமா? அல்லது தங்களிடையே இருக்கும் உறவை தொடர அவை வித்தியாசமாக வழிமுறையை பின்பற்றுமா? பவன் கல்யாணின் நோக்கமும், திசையும் என்னவாக இருக்கும்? ஆந்திர பிரதேச அரசியல் கூட்டணியில் கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பாதிப்பு எத்தகையதாக இருக்கும்? இவையனைத்தும் ஆந்திர பிரதேச அரசியலில் இருக்கின்ற ஆர்வமூட்டும் கேள்விகள்.

சிறப்பு அந்தஸ்து
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அரசியல் ஆதாயங்களை சாதித்து கொள்ளக்கூடிய ஓர் ஆயுதமாக மாநிலத்துக்கான ‘சிறப்பு அந்தஸ்து கோரிக்கை’ உள்ளது.
தங்களிடம் இருக்கும் வேறுபாடுகளை விட்டுவிட்டு இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் ஒருமித்த கருத்துக்கு வருமா என்பது இன்னொரு கேள்வி. ஆனால், நம்முடைய அரசியலில் இத்தகைய ஒற்றுமையான நடவடிக்கைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் சர்ச்சை நீண்டகாலமாக நிலவி வருகிறது.
இது உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனையாகவும் உருவாகியுள்ளது.
இந்த பிரச்சினையின் தொடக்கம் பற்றி குறிப்பிடுவது மிகவும் முக்கியம்.
சிறப்பு அந்தஸ்து என்பது குறித்து சட்டத்தில் ஏதுமில்லை.
ராஜதந்திர முன்னெடுப்புக்குப் பின்னர், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அவசர கதியில் நாடாளமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.
இது சட்ட அடிப்படையை பெற்றுள்ளதா என்பது இரண்டாம்பட்சம். ஆனால், இந்த வாக்குறுதி இந்திய அரசின் அதிவுயர் மன்றமான நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கானாவை புதிதாக தோன்றிய மாநிலம் என்று கூறிக்கொண்டாலும், நடைமுறையில் அதற்கே உரித்தான சிக்கல்களோடு, தலைநகர் இல்லாத ஆந்திரப்பிரதேசம்தான் புதிய மாநிமாகும்.


ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு பாஜகவும் ஆதரவு அளித்தது.
5 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வெங்கையா நாயுடு தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஆனால், பாஜக ஆட்சியமைந்தவடன், அவர்களின் குரல் மாறத் தொடங்கியது.
சிறப்பு அந்தஸ்து சட்டத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்தப்போவதாக ராஜதந்திர முறையில் பாஜக தெரிவிக்கிறது.
ஆட்சி அதிகாரம் என்பது தொடர் செயல்முறை. கடந்த ஆட்சியில் அந்த அரசு வழங்கியதும், அந்நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஆதரவு அளித்ததுமான வாக்குறுதியை நடைமுறைப்படுத்தவது என்பது பிரதமர் நரேந்திர மோதி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம்தான் உள்ளது.
சிறப்பு ரயில் மண்டலம் மற்றும் மாநில சிறப்பு அந்தஸ்து முன்மொழிவை பரிசீலிப்பதாக இந்திய மத்திய அரசு வாக்குறுதி அளித்தபோது, இந்த வாக்குறுதியில் இருந்து மக்கள் கொஞ்சமாவது எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசியல் தலைவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.
ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் தங்களுக்கு எவ்வித அரசியல் பயனும் இல்லை என்று பாஜக கருதுமானால், கூட்டாட்சி அமைப்புக்கு இந்த அணுகுமுறை நன்மை பயக்காது.
ஆந்திர பிரதேசத்திற்கு 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்க அழுத்தம் கொடுத்த வெங்கைய்ய நாயுடு, அவருடைய செயல்பாட்டுக்காக தற்போது வருத்தம் அடையலாம்.
நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பல்வேறு குழுக்களிடம் இருந்து அவர் அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு சட்டத்தில் இருக்கின்ற அம்சங்களுக்கு அருண் ஜெட்லி முக்கியத்துவம் அளிப்பது தேவையில்லாதது.
பிற மாநிலங்களும் இவ்வாறு கோரிக்கை விடுக்கும் என அவர்கள் கூறுவது சரியான வாதமல்ல.
பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி முறிவு


சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களின்படி, சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு தகுதியில்லை என்பது உண்மையே.
ஆனால், இந்த மாநிலப் பிரிவினையே சிறப்பானதொரு சூழ்நிலையில் உருவானதே. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியோடு மாநில அரசு தலைநகர் உருவாக்கப்படாமலேயே ஆந்திர பிரதேசம் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
முன்னாள் அரசு வழங்கிய வாக்குறுதியை அடுத்து வரக்கூடிய அரசு நிறைவேற்றவேண்டும் என்பதை அருண் ஜெட்லி புரிந்து கொள்ளாதவரல்ல.
இந்திய மத்திய அரசு, ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உண்மையிலேயே நினைத்தால், அவர்களின் செயல்பாடுகளை, முடிவை கட்டுப்படுத்தக்கூடியவர் யாரும் இல்லை.
14வது இந்திய திட்டக் கமிஷன் சிறப்பு அந்தஸ்து பரிந்துரைகளை நீக்கிவிட்டதால், இதனை வழங்குவது இயலாதது என்கிற நிலைமை மத்தியில் பாஜக ஆட்சி உருவான பின்னர் ஏற்பட்டதாகும்.
மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர்சிபி ஆளும் கட்சியை தாக்குவதற்கு இதனை ஆயுதமாக பயன்படுத்துகின்றது.
சிறப்புத் திட்டங்கள் மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்குதாக மத்திய அரசு அறிவித்தபோது சந்திரபாபு நாயுடு நம்பிக்கையோடும், நேர்மறையாகவும் இருந்தார்.
அவருடைய அமைச்சர்கள் பாஜகவுக்கு எதிராக பேசுவதை தடுக்க சந்திரபாபு நாயுடுவால் முடிந்தது.


ஊடகங்கள் இது பற்றி விரிவாக செய்திகள் வெளியிட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்தை விட சிறப்புத் திட்டங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் நல்லது என்று பலரும் திறனாய்வு செய்திருந்தனர்.
மத்திய அரசோடு மாநில ஆளும் கட்சி கொண்டிருக்கும் அணுகுமுறையில் சுயநலக் காரணங்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஒய்எஸ் ஜெகன் விமர்சித்து வருகிறார்.
மறுபுறம், சாலாசானி ஸ்ரீனிவாஸ், சிவாஜி போன்ற திரையுலக ஆளுமைகள் பிரிவினை வாக்குறுதி நிறைவேற்றுக் குழு என்ற வடிவத்தில் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பவன் கல்யாண் அரசியல் பிரவேசம்
தன்னுடைய சொந்த கட்சியை உருவாக்குவதற்கு முதற்படியாக இதனை திரைப்பட நடிகர் பவன் கல்யாண் கையில் எடுத்துள்ளார்.
இவருடைய அரசியல் அறிக்கைகள் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வரலாம். ஆனால், அவர் தமது ரசிகர்களிடம் பெற்றுள்ள செல்வாக்கினை மறுத்துவிட முடியாது.
சிறப்பு அந்தஸ்து பற்றிய அவரது நிலைப்பாடும், சிறப்பு அந்தஸ்து குறித்து ஆராய்வதற்கான கூட்டு உண்மை கண்டறியும் குழுவை அமைப்பதும் குறைவாக பார்க்கப்பட வேண்டியவை அல்ல.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சமீபத்தில் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் தலைவர் ஜெகனிடம் பவன் கல்யாண் சாவல் விடுத்து, அவ்வாறு அவர் செய்வதாக இருந்தால், தன்னுடைய ஆதரவை அவருக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
இதனை ஏற்றுக்கொண்டுள்ள ஜெகன், இந்த சவாலை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தன்மீது நிலுவையில் இருக்கின்ற நீதிமன்ற வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள முற்படுவதாக தெலுங்கு தேசம் கூறிவருவதற்கு எதிரானதாக ஜெகன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நிலைமைகள் எல்லாம் தெலுங்கு தேசம் மீதான அழுத்தங்களை அதிகரித்துள்ளது.
பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி முறிவு


சிறப்பு அந்தஸ்து, தலைநகரம், வேலைவாய்ப்புகள் தொடர்பாக மக்களிடம் இருந்து வருகின்ற எதிர்ப்பை எதிர்கொள்ள தெலுங்கு தேசத்திற்கும் ஆயுதம் ஒன்று தேவைப்படுகிறது.
எனவே, தற்போது தெலுங்கு தேசம் எடுத்துள்ள நடவடிக்கை மூலம் எல்லா குற்றச்சாட்டுக்களும் பாஜக மீது திருப்பப்பட்டுள்ளன.
இடது சாரிக் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கிறபோது தங்களை தோழர்களாகவும், பாஜகவோடு இணைந்திருக்கிறபோது, ஆன்மிகக் குழுவாகவும் காட்டிக்கொள்ளும் தெலுங்கு தேசம் கட்சியின் சந்தர்ப்பவாத அணுகுமுறைக்கு வீழ்ச்சி ஏற்படும்.
கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும் கடுமையாகப் போட்டியிட்டன.
முந்தைய விவசாய கடன் தள்ளுபடி மூலமும் கூட்டணியாக இருந்த நரேந்திர மோதி மற்றும் பவன் கல்யாணிடம் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி நன்மை பெற்றது.
இது இல்லாவிட்டால் நிலைமை முற்றிலும் மாறாக இருந்திருக்கும். ஆந்திர பிரதேசத்தில் பாஜக வலுவாக இல்லாவிட்டாலும், அந்நேரத்தில் மோடி அலை ஓர் ஒளிக்கீற்றாக வேலை செய்தது.
பவன்கல்யாணால் செய்யப்பட்ட பரப்புரை அவருடைய ரசிகர்களிடம் இருந்து ஊக்கத்தை அளித்திருந்தது.
டெல்லியை விட சிறந்ததொரு தலைநகரம் கட்டியமைக்க நரேந்திர மோதி அளித்த வாக்குறுதி, பண்டல்கான்ட் மாதிரியில், ஆந்திர பிரதேசத்தின் பின்தங்கிய பகுதியான வட ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்கள் என பாஜகவின் அறிவிப்பு எல்லாம் அந்த மாநில மக்களிடம் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தன.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமா, இல்லையோ, போட்டோஷாப் புதிய நகரங்களின் வித்தியாசமாக மாதிரிகளை சந்திரபாபு நாயுடு காட்டி வருகிறார்.
அவர் காட்டி வந்த புகைப்படங்களுக்கு நிகராக கட்டுமானங்கள் உள்ளதா என்றால் மிக பெரிய கேள்விக்குறி.
அனைத்தையும் நேர்மறையாக பார்ப்போருக்கு அமராவதி நதியை சுற்றிய சில கட்டுமானங்கள், மரங்கள் வளர்ப்பது அகியவற்றை காட்டுகின்றனர்.
ஆனால், அந்த வளர்ச்சி செயல்பாடுகளை கேள்வி கேட்போர் வேறு முறையில் கேள்வி எழுப்புகின்றனர். இது அரைக் குவளை நிறைந்திருப்பதாகக் காட்டுவதுதான்.
இந்தப் பிரதேசத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டனவா, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளனவா என்பது இன்னொரு கேள்வி.
தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்டவற்றை எல்லாம் நிறைவேற்றுவது எளிதானதல்ல.
நாங்கள் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டோம். மத்தியில் இருந்து ஆதரவு கிடைக்காததால் எதிர்பார்த்த முடிவுகளை பெற இயலவில்லை என்று தெலுங்கு தேசம் இப்போது, சிறப்பாக வாதிட முடியும்.
சந்திரபாபு நாயுடு மத்திய அரசோடு வைத்திருக்கும் அணுகுமுறை பற்றி ஜெகன் குற்றம்சாட்டும் போதெல்லாம், மாநிலத்திற்கு அனுகூலமாக இருக்கும் வகையிலேயே தாம் நடந்துகொள்வதாக சந்திரபாபு நாயுடு காட்டியுள்ளார்.

பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி முறிவு DRSIVAPRASAD/YSAVINASHYOUTH/FB
இப்போது சந்திரபாபு நாயுடு எடுத்த முடிவு எவ்விதம் இட்டுச் செல்லும் என்பதற்குத் தெளிவானதொரு விடை கிடையாது.
இதனை சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல் தந்திரி எவ்வாறு முன்னெடுத்து செல்லப்போகிறார் என்று கவனிப்பது ஆர்வமளிப்பதாக இருக்கும்.
ஒய்எஸ்ஆர்சிபி கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், தமது எதிர்க்கட்சிக்கு தெலுங்கு தேசம் எப்படி ஆதரவு அளிக்கும் என்பது கவனிக்கதக்க இன்னொரு அருமையான காட்சியாக அமையும்.
ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் நீடிக்கவேண்டும் என்று போராடிய தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தும் தர்ணாக்கள் மற்றும் போராட்டங்கள் தவிர பிரிவினை தொடர்பான உறுதியான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என்பது மாநிலம் முழுவதும் கேட்கும் குரலாக உள்ளது.
சிறப்பு அந்தஸ்து தொடர்பாகவும் பல அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இதே மாதிரியான நிலைமை தோன்றியுள்ளது.
இதே காட்சிகளை மாநிலத்திலும், நாடாளுமன்றத்திலும் காண்பது வழக்கமாக உள்ளது.
சிறப்பு அந்தஸ்துக்கான போராட்டமும் இன்னொரு செயல்திறனற்ற “ஐக்கிய ஆந்திர இயக்கம்” போல மாறுமா அல்லது அதிலிருந்து வேறுபட்டதாக இருக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
bbc

கருத்துகள் இல்லை: