திங்கள், 14 மே, 2018

கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் ; பயன்பாடின்றி துருப்பிடித்துப் போன இயந்திரங்கள்

s1
seanakkheeran.in>பாலாஜி< கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட நரிப்பையூரில் கடற்கரையோரத்தில் கடந்த 1999 ஜூன் 26 முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது கடல்நீரை நன்னீராக்கும் திட்டம். ரூ.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 290 கிராமங்கள் பயன்பெறும் வகையிலும், 1 லட்சத்து 30 ஆயிரம் கிராம மக்களுக்கான குடிநீரின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து வந்தது. 1999 முதல் 2004 வரை பெல் என்ற தனியார் நிறுவனத்தினரால் நாற்பது தொழிலாளர்களைக்கொண்டு இயக்கம் மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லி., குடிநீரை உற்பத்தி செய்தனர்.
கடும் வறட்சியுள்ள பகுதிகளாவும் குடிநீருக்காக நாள்தோறும் அலையும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கடலாடி, கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் விநியோகத்தால் பயன்பெற்றனர்.
பின்னர் பெல் கம்பெனியின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை முன்னிட்டு, தோஷியான் என்ற நிறுவனத்திற்கு இயக்க, பராமரிப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்பபையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் ஒப்படைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தாரின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் 25 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். கடந்த 2010 ஆண்டு வரை பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்திடம் குடிநீர் வாரியத்தினர் மறு ஒப்பந்தம் செய்யாததால், ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஏதுமின்றி கடந்த 2014 டிச., மாதத்துடன் தனது இயக்கத்தை நிறுத்திகொண்டது.
கடல்நீரை சேமிக்கும் ராட்சத தொட்டி அறை, மோட்டார் பம்பு அறைகள், குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரக் குழாய்கள், உப்புநீரை பிரித்தெடுக்கும் பில்டர் பைப்புகள், நன்னீரை தேக்கி வைக்கப்பயன்படும் 10 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி, நிர்வாக அலுவலகம் ஆகியவை பயன்பாடின்றி, ஆள் அரவறமற்ற நிலையில் இருந்து வருகிறது.


பல கோடி ரூபாய் மதிப்புமுள்ள எலக்ட்ரானிக், இயந்திரங்கள், ராட்சத மோட்டார்கள், பைப்புகள் துருப்பிடித்து, சிலமடைந்து உள்ளது. பயன்பாடற்ற நிலையில் உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் முடங்கி போயுள்ளது. இதற்காக விஷேசமாக கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிகளும் சேதமடைந்துள்ளன. முன்பு பயன்பெற்ற கிராமங்களுக்கு தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. எனவே மீண்டும் இத்திட்டம் செயல்பட, ஆய்வு செய்து நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: